ஓரு குட்டி கதை.


வாழ்க்கையில் எது முக்கியம்?


ஒரு ஊரில் ஒரு ஆசிரமம். அந்த ஆசரம்மத்தைச்  சுற்றி ஏராளமான செடி 
கொடிகளும்,மாமரங்களும் இருந்தன.
அந்த ஆசிரம்மத்தைக் கடந்து சென்றால், அங்கே ஒரு பள்ளி கூடம்.
தினமும் அந்த ஆசரம்மத்தின் வழியாகத்தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள். காலையில் மாணவர்கள் 
அந்த வழியாகத்தான் பள்ளிக்கு செல்வார்கள். காலையில் மாணவர்கள் அந்த பள்ளிக்குச் செல்வதையும் மாலையில் வீடு திரும்புவதையும் ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார்.

அந்த பெரியவர்க்கு ஒர் ஆச்சரியம்,மாணவர்கள் காலையில் அந்த வழியாக போகுறபோது அங்கிருக்கும் மாமரங்களைத் தரும்பி
கூட பார்பதில்லை,ஒழுங்காக போவார்கள். ஆனால் மாலையில் திரும்பபுகிறபோது அப்படி இல்லை.
அவர்களுடைய குணம் முற்றிலும் மாறிவிடும். ஆளுக்கொரு கல்லை ஒரு 
கையில் எடுத்துக்கொண்டு மாம்பழங்களை குறிவைத்து கற்களை எறிவார்கள். பழங்கள் கிழே விழுந்தும்
அதை எடுத்துக்கொள்வார்கள்.

காலையில் ஒழுங்காக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்,மாலையில் மட்டும் ஏன் இப்படி குறும்பு செய்கிறொர்கள் என யோசிக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.ஒரு நாள் ஒரு மாணவனை கூப்பிட்டார்.தம்பி, காலையில் ஒழுங்காக போகுகிறீர்கள்
ஆனால், மாலையில் குறும்பு செய்கீகளே 
ஏன் என்று கேட்டார் அந்த பெரியவர். அதற்கு அந்த சிறுவன் காலையில் நாங்கள் சரியான நேரத்தில் பள்ளிக்குச் 
செல்ல வேண்டும். ஆசிரியர் கேட்கும் 
கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் ஆசிரியரிடம் திட்டு
வாங்க வேண்டும். உதை வாங்க வேண்டும்.

ஆனால் மாலையில் அப்படி இல்லை வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும்
செல்லலாம். அதனால் தான் குறம்புகள்
செய்கிறோம் என்றான் அந்த சிறுவன்.
இதை கேட்ட பிறகு தான்,அந்த பெரியவருக்கு ஒர் உண்மை தெரிய வந்தது. இந்த மாணவர்கள் இந்த வழியாக போகுறபோது ஒரு குறிக்கோளுடன் செல்கிறார்கள் அதனால், எந்த குறும்பும் செய்வதில்லை
ஆனால் மாலையில் செல்கிறபோது அந்த
குறிக்கோள் இல்லாத காரணமாக அவர்கள் குறும்பு செய்கிறார்கள் என்பது
புரிந்தது.


இக்கதையில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
வாழ்க்கையில் இலச்சியம் கொண்டு 
இருப்பவன் ஆயிரம் தவறு செய்தால்,
இலச்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் 
தவறுகள் செய்வான்.

எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு
இலச்சியம் அவசியம் என்பதை இக்கதை
நாம் புரிந்து கொள்ளலாம் 
  
                        நன்றி

Comments